Indian-origin boy wins gold in yoga | யோகாவில் தங்கம் வென்ற இந்திய வம்சாவளி சிறுவன்

லண்டன் :பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், ஸ்வீடனில்நடந்த ஐரோப்பிய யோகா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள கென்ட் மாகாணத்தின் செவன்ஓக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வர் சர்மா, 13. இவரது தந்தை விஸ்வநாத், கர்நாடகாவின் மைசூரை பூர்வீகமாக கொண்டவர்.’ஆட்டிசம்’ஈஸ்வர், தன் தந்தை தினமும் யோகாசனங்களை செய்வதை பார்த்து 3 வயதாக இருக்கும்போது யோகா பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கினார். இதன் காரணமாக சிறு வயதிலேயே பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் மல்மோவில் சமீபத்தில் சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் 12 – 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஈஸ்வர் சர்மா
பங்கேற்றார்.இதில், தன் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர் ,முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த பதக்கத்தை, ‘ஆட்டிசம்’ போன்ற பாதிப்புகளை கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஆன்லைன் வாயிலாக 14 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தினசரி யோகா வகுப்புகளைநடத்தினார்.சிட்டிசன் யூத்இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அப்போதைய பிரிட்டன்பிரதமர் போரிஸ் ஜான்சன், ஈஸ்வர் சர்மாவைவெகுவாக பாராட்டியதுடன், விருது வழங்கிகவுரவித்தார்.இதுதவிர, ஈஸ்வர் சர்மா, யோகாவில் உலக ‘சாம்பியன்ஷிப்’ பட்டத்தை ஐந்து முறையும், பிரிட்டன் சிட்டிசன் யூத் என்ற விருதையும் வென்றுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.