ஜெருசலேம்: அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7 முதல் போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேலில், 1,400 பேரும், காசாவில், 11,000 பேரும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் எகிப்து- காசா எல்லைப்பகுதிக்கு ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்கள் சென்றனர். இதையடுத்து, அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் ஏற்க முடியாதது என ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement