திருவனந்தபுரம்: நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் என்ற பெருமையுடன் இவர் படங்களில் நடிக்க துவங்கினாலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழில் சிம்புவுடன் இவர் நடித்திருந்த மாநாடு படம் கல்யாணிக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுத் தந்தது.
