வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில் விசாரணை துவங்குவதற்கு முன்னர் இந்தியா குற்றவாளியாக ஆக்கப்பட்டு உள்ளது என, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியுள்ளார்.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில் இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்திற்கு பிறகு, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய்குமார் வர்மா முதல்முறையாக கனடா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அதில் சஞ்சய்குமார் வர்மா கூறியதாவது: படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவடையாத நிலையில், இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டு உள்ளது. இது தான் சட்டத்தின் ஆட்சியா?
கிரிமினல் அகராதிப்படி, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஒருவர் கூறினால், அதற்கு, நீங்கள் ஏற்கனவே குற்றவாளி ஆக ஆக்கப்பட்டு விட்டீர்கள். நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அர்த்தம்.
ஆனால், குறிப்பிடத்தக்க மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் இருந்தால், அதனை எங்களிடம் பகிருங்கள். அது குறித்து ஆராய்கிறோம் என உறுதியுடன் கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement