Maruti Swift – 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் பற்றி 5 முக்கிய அம்சங்கள்

2024 ஆம் ஆண்டு மாருதி சுசூகி விற்பனைக்கு கொண்டு வரவிருக்கும் புதிய ஸ்விஃப்ட் காரில் தற்பொழுது வரை வெளிவந்துள்ள என்ஜின் விபரம், டிசைன், மைலேஜ், அறிமுக விபரம் ஆகிய முக்கியமான 5 தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

புதிய சுசூகி ஸ்விஃப்ட் கார் முதன்முறையாக ஜப்பான் மோட்டார் ஷோ அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்திய சாலைகளிலும் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றது.

2024 Maruti Suzuki Swift

தற்பொழுதுள்ள மாடலின் அடிப்படையான டிசைனில் பெரிய மாற்றமில்லாமல், ஆனால் பல்வேறு சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை கொடுத்துள்ளது. தேன்கூடு வடிவத்துடன் கூடிய புதிய கிரில் மற்றும் சுஸுகி லோகோ கீழ் பகுதியில் முன்பக்க கேமராவும் உள்ளது. புதிய பம்பர் மற்றும் அலாய் வீல் பெற்றுள்ளது.

ஸ்விஃப்ட் காரில் புதிய எல்இடி டெயில் விளக்குகளில் தலைகீழ் சி-வடிவ பாணி டெயில் விளக்குகள் மற்றும் ஒட்டுமொத்த டெயில் விளக்குகள் வெளிப்படையான கண்ணாடியை கொண்டுள்ளது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் பரிமாணங்கள் ஒட்டுமொத்த நீளம் 3860 mm, அகலம் 1735 mm மற்றும் உயரம் 1500 mm ஆகும் முக்கியமான வீல்பேஸ் மாற்றமில்லாமல் தொடர்ந்து 2450 mm ஆக உள்ளது.

New Maruti Suzuki Swift dashboard

ஸ்விஃப்ட் இன்டிரியர்

சுசூகி ஸ்விஃப்ட் காரின் இன்டிரியரில் முழுமையான கருப்பு நிறத்துடன் சிறிய அளவிலான வெள்ளை என இரட்டை நிறத்தை பெற்ற புதிய டாஷ்போர்டு அமைப்பைப் பெறுகிறது.இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான புதிய கிராபிக்ஸ் உடன் ஏசி கண்ட்ரோல் பேனலும் புதியதாகத் தோன்றுகிறது.

9 அங்குல தொடுதிரை ஃபீரீ ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, அனலாக் முறையிலான டயல் பெற்ற MID டிஸ்ப்ளேவைப் பெறுகிறது மற்ற அம்சங்களில், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பட்டன்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவை அடங்கும்.

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் என்ஜின்

முந்தைய நான்கு சிலிண்டர் நீக்கப்பட்டு புதிய மூன்று சிலிண்டர் Z12E பெட்ரோல் என்ஜின் பவர் மற்றும் டார்க் விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் தற்பொழுது கிடைக்கின்ற மாடலை விட கூடுதலாக 90 hp-100 hpக்குள் பவர் மற்றும் 150NM டார்க் வெளிப்படுத்தக்கூடும். சர்வதேச சந்தையில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி என இரு விதமான ஆப்ஷனை பெற உள்ளது.

இந்திய சந்தைக்கு சிவிடி கியர்பாக்ஸ் மாடலுக்கு பதிலாக ஏஜிஎஸ் எனப்படும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

suzuki swift

ஸ்விஃப்ட் மைலேஜ்

சமீபத்தில் ஜப்பானில் வெளியிடப்பட்ட விபரங்களின் படி சுசூகி ஸ்விஃப்ட் மைலேஜ் 23.40kmpl (ஹைபிரிட் அல்லாத மாடல்) மற்றும் 24.50kmpl (ஹைபிரிட் உடன் சிவிடி கியர்பாக்ஸ்) மைலேஜ் தரும் என குறிப்பிட்டுள்ளது.

புதிய அம்சங்கள்

குறிப்பாக சர்வதேச சந்தையில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல் ADAS போன்ற உயரிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றாலும், இந்தியாவில் இந்த வசதியை பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அடிப்படையான பாதுகாப்பில் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 6 ஏர்பேக்குகள் வழங்குவதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கலாம்.

ஆனால் சுசூகி கனெக்ட் மூலம் கனெக்ட்டிவிட்டி வசதிகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகளை ஆதிரிக்கும் வகையிலான 9 அங்குல தொடுதிரை ஃபீரீ ஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, அனலாக் முறையிலான டயல் பெற்ற MID டிஸ்ப்ளேவைப் பெறுகிறது மற்ற அம்சங்களில், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட பட்டன்கள், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி ஆகியவை பெற உள்ளது.

New Maruti Suzuki Swift

அறிமுகம் மற்றும் விலை எதிர்பார்ப்புகள்

2024 ஆம் ஆண்டின் முதல் காலண்டில் வரவுள்ள புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை ரூ.6.00 லட்சத்துக்குள் துவங்கலாம். போட்டியாளர்களாக ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், டாடா டியாகோ, சிட்ரோன் சி3 மற்றும் சிறிய ரக காம்பேக்ட் எஸ்யூவி கார்களும் உள்ளன.

2024 Maruti Swift Photo gallery

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.