பெஷாவர்: பாகிஸ்தானில் போலீசார், -பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டம் கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது.
அப்பகுதிக்கு சென்ற போலீசார் பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றனர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் தேடப்பட்டு வந்த ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியாகினர். பயங்கரவாதி பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், குண்டுகள், டூவிலரை போலீசார் கைப்பற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement