பல்ராம்பூர்:உத்தர பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி, ஐந்து வயது சிறுவன் உயிரிழந்தான். சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
உ.பி., மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம் சோஹெல்வா மலைக் கிராமத்தில் வசித்த ரித்தேஷ்,5, தன் தாத்தாவுடன் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளான்.
அப்போது, புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தை, ரித்தேஷ் மீது பாய்ந்து அவனை புதருக்குள் இழுத்துச் சென்றது. ரித்தேஷின் அலறல் கேட்டு கிராம மக்கள் திரண்டனர். கூட்டத்தைப் பார்த்து மிரண்ட சிறுத்தை, காட்டுக்குள் ஓடி மறைந்தது.
கிராம மக்கள் காட்டுக்குள் தேடி, ரித்தேஷ் உடலைக் கண்டுபிடித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை மற்றும் போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேசிய பல்ராம்பூர் கலெக்டர் அரவிந்த் சிங், “சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகள் அமைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின், ரித்தேஷ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement