திருவண்ணாமலை திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். உலக புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவுக்கு வருகை தருவார்கள். கடந்த 17 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா […]
