இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் சமந்தா!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த குஷி படத்திற்கு பிறகு சமந்தா நடிக்கும் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு என்னும் வெளியாகவில்லை. அதேசமயம் ஏற்கனவே அவர் கமிட்டாகியிருந்த சென்னை ஸ்டோரிஸ் என்ற ஆங்கில படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். அதோடு மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்று வரும் சமந்தா, தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படியான நிலையில் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பல உதவிகளை செய்து வரும் சமந்தா, விரைவில் இந்த நிறுவனத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கத் திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் அவரை பிரிந்தார். அதன் பிறகு மறுமணம் ஏதும் செய்து கொள்ளாமல் இருக்கும் சமந்தா, தற்போது இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டு இருப்பதால், அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.