ஜெய்ப்பூர் நேற்று நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் 74% வாக்குப் பதிவாகி உள்ளது. ஏற்கனவே மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 4-வது மாநிலமாக ராஜஸ்தானுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 200 தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது. தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றைய தேர்தலில் 5.25 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் […]
