ஐபிஎல் 2024-க்கு அனைத்து அணிகளும் தக்க வைத்துக் கொண்ட மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவின் பெயர். அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ந்து வழிநடத்தப்போகிறாரா? அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், குஜராத் அணி வெளியிட்ட ரீட்டெயின் வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட ரீட்டெயின் லிஸ்டில் கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார்.
இதில் இன்னும் சீன்கள் முடியவில்லை. கிளைமேக்ஸ் டிசம்பர் 12 ஆம் தேதி தான் இருக்கிறது. அதாவது ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதற்கு 7 நாட்கள் முன்பு வரை ஒரு அணி மற்றொரு அணியுடன் வீரர்களை வர்த்தகம் செய்து கொள்ள முடியும். அந்தவகையில் இப்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடருவார் என அறிவிக்கப்பட்டாலும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் அவர் மும்பை அணிக்கு வர்த்தகம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
November 26, 2023
ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே ஊதியம் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் தொடர்பாக முரண்பாடு எழுந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்பு கொண்ட ஹர்திக் பாண்டியா தன்னுடைய விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளார். இதற்கு உடனே ஓகே சொன்ன மும்பை அணி நிர்வாகம் 15 கோடி ரூபாய்க்கு ஹர்திக் பாண்டியாவை அதிகாரப்பூர்வமாக வர்த்தகம் செய்ததாக தகவல் வெளியானது. அத்துடன் திரைமறைவில் சில பல கோடி ரூபாய் கைமாறியிருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இது குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
November 26, 2023
நவம்பர் 24 ஆம் தேதி ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், நவம்பர் 26 ஆம் தேதி குஜராத் அணியிலேயே அவர் தொடருவார் என அறிவிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் சில டீல்கள் நடத்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இப்போது கூறப்படுகிறது. இருப்பினும் டிசம்பர் 12 ஆம் தேதி வரை கிளைமேக்ஸூக்கு காத்திருக்க வேண்டும்.