சண்டிகர்: கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூருக்கு வருகைதந்தார். அப்போது சிலர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பிரதமர் நரேந்திர மோடி வந்த வாகனம் அங்குள்ள மேம்பாலத்தி்லேயே நிறுத்தப்பட்டது.
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பதிண்டா மாவட்ட போலீஸ்எஸ்.பி.யாக இருந்த குர்பிந்தர் சிங் கவனித்துக் கொண்டார். இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பிரதமர் வருகையின்போது கவனக் குறைவாக நடந்துகொண்டதாக எஸ்.பி.குர்பிந்தர்சிங் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.