மும்பை இந்தியன்ஸூக்கு இப்பவே கோல்டு கிடைச்சிருக்கு – அஸ்வின் பூரிப்பு

ஐபிஎல் 2024 ஜூரம் இப்போதே தொற்றிக்கொள்ள தொடங்கிவிட்டது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைத்துக் கொண்ட மற்றும் வெளியிட வீரர்களின் பட்டியலை இன்று மாலைக்குள் விடுவிக்க வேண்டும். அதனடிப்படையிலேயே ஒவ்வொரு அணியும் தங்களுக்கு இருக்கும் பணத்தைக் கொண்டு துபாயில் நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் வீரர்களை எடுக்க முடியும். மேலும், ஐபிஎல் அணிகள் தங்களுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளலாம். அதனடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்ப இருப்பது தான் ஹாட்  டாப்பிக்காக இருக்கிறது.

குஜராத் அணிக்கு ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்த ஒரு கேப்டனையே குஜராத் அணி மும்பை அணிக்கு விட்டுக் கொடுக்கிறது. 15 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப இருக்கிறார் ஹர்திக்  பாண்டியா. வெளிப்பைடயாக பார்க்கும்போது இந்த தொகைக்கு தான் பாண்டியாவை குஜராத் விட்டுக் கொடுக்கிறதா? என்ற கேள்வி எழலாம். ஆனால் திரைமறைவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே மிகப்பெரிய டீல் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.  அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பாண்டியா ஒப்புக் கொண்டதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கூடுதல் பணமும், அதிகப்படியான பிராண்ட் ஒப்பந்தங்களையும் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளரான சிவிசி கேப்பிட்டல்ஸ் மறுத்ததையடுத்து, பாண்டியா மும்பை அணி நிர்வாகத்திடம் தங்களது அணிக்கு திரும்பும் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அத்துடன் பாண்டியாவின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஒப்புக் கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். இதனடிப்படையிலயே மும்பை அணிக்கு திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழலில் ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் ரிட்டன்ஸ் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப்பில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது, ” மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்புவது என்பது கோல்டுக்கு நிகரானது. பணம்மெல்லாம் அதற்கு ஈடில்லை. அதேநேரத்தில் பாண்டியா 15 கோடி வீரர் என்பதால் அவருக்கு ஈடான தொகைக்கு சில வீரர்களை அந்த அணி விட்டுக்கொடுத்தாக வேண்டும். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.