75 ஆயிரம் ரூபாய் சாம்சங் மொபைல் வெறும் 10 ஆயிரத்துக்கும் குறைவான விலையில்..!

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கின் முந்தைய ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜியை ரூ.10,000க்கும் குறைவாக வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு அமைந்துள்ளது. எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் இந்த விலைக்கு வாங்கலாம். சாம்சங்க் நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற தரமான மொபைல்களில் ஒன்று.  சாப்ட்வேர் நன்றாக இருக்கும் என்பதால் உலகம் முழுவதும் அதிகமானோர் விரும்பி வாங்குகின்றனர். அதேநேரத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு பிரீமியம் சந்தையில், மற்ற பிராண்டுகள் கடும் போட்டியை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்த சூழலில் தான் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆஃபர்களுடன் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart-ல் Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனின் Exynos பதிப்பில் ரூ.43,000 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது. இதனால் போனின் விலை பாதிக்கு மேல் குறைந்துள்ளது. அதே நேரத்தில், வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்துவதில் நீங்கள் வெற்றி பெற்றால், இந்த ஃபோனை ரூ. 10,000க்கும் குறைவாகப் வாங்கலாம். இந்த பிரீமியம் போனை இந்த விலையில் பெறுகிறீர்கள் என்றால், வாங்குவதற்கு முன் யோசிக்க வேண்டியதில்லை.

Galaxy S21 FE 5G -யை மலிவாக வாங்குவது எப்படி?

சாம்சங்கின் முந்தைய எடிஷன் மாடலை அறிமுகப்படுத்திய நேரத்தில், 8ஜிபி + 128ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.74,999 ஆக இருந்தது. Flipkart இல் 57% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த மாடல் மொபைல் இப்போது 31,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதேசமயம் Samsung Axis Bank மற்றும் Flipkart Axis Bank கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், 10% வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் போனின் விலை ரூ.30,000க்கும் குறைவாக இருக்கும்.

உங்களிடம் பழைய போன் எக்ஸ்சேஞ்ச் இருந்தால், அதற்கு ஈடாக அதிகபட்சமாக ரூ.22,100 வரை தள்ளுபடி பெறலாம். இந்த தள்ளுபடியின் மதிப்பு பழைய போனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது. இருப்பினும், அதிகபட்ச தள்ளுபடியில், Galaxy S21 FE 5G -ஐ வாங்க நீங்கள் ரூ. 10,000 -க்கும் குறைவாக செலுத்த வேண்டும். இந்த போன் கிராஃபைட், லாவெண்டர், ஆலிவ், நேவி மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Galaxy S21 FE 5G இன் விவரக்குறிப்புகள்

சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் முழு HD + டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஃபோன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகத்துடன் எக்ஸினோஸ் செயலியுடன் வருகிறது. கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற பேனலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 12MP+12MP+8MP சென்சார்கள் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. 32எம்பி முன்பக்க கேமராவுடன் போனின் 4500 எம்ஏஎச் பேட்டரி வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.