வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரீஸ்: போர்ப்ஸ் பத்திரிகை கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இடம்பெற்றுள்ள 19 வயது இத்தாலி தொழிலதிபரின் மகன் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
இத்தாலிய தொழிலதிபரும், உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி நிறுவனமான எசிலர் லக்சோட்டிகாவின் உரிமையாளரான லியொனார்டோ டெல் வெச்ஹியோ கடந்த ஆண்டு 87 வயதில் காலமானார். அவரது சொத்துகள், மனைவிக்கும், 6 குழந்தைகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டன. அந்த வகையில், அவரது ஒரு மகன் கிளமென்டோ டெல் வெச்ஹியோ (19) கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்
அவரை பற்றிய சிறப்புகள்
* கிளமென்டோ டெல் வெச்ஹியோ 19 வயதில் கோடீஸ்வரர் ஆகி உள்ளார்.
* லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இவரது தந்தையின் நிறுவனம் மூலம் 12.5 சதவீத பங்குகளும் இவருக்கு கிடைத்துள்ளது.
* தற்போது, இவரின் மொத்த சொத்து மதிப்பு 4 பில்லியன் அமெரிக்க டாலர்( போர்ப்ஸ் கணிப்புப்படி)
* தற்போது, படிப்பு மற்றும் சுய விருப்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மீது ஆர்வம் உள்ளது. இது குறித்து படிக்க கல்லூரியில் இணைய முடிவு செய்துள்ளார்.
*இத்தாலியில் மிலன் நகரில் குடியிருப்பு மற்றும் வில்லா என பல சொத்துகள் லியொனார்டோ டெல் வெச்ஹியோ பெயரில் உள்ளது.
* இவரது தந்தை பல நிறுவனங்களை நடத்தி வந்தாலும், லியொனார்டோ டெல் வெச்ஹியோ தனது குடும்ப தொழிலில் கவனம் செலுத்தியது கிடையாது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement