வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நைனிடால்: விபத்தில் சிக்கிய ஒருவரை கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, அதில் இருந்தவரை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தார். இதற்கு அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடாலில் மலைப்பாதை வழியாக சென்ற கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை அப்பகுதி வழியாக காரில் வந்த இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இதனை கவனித்தார். உடனடியாக, அந்த வழியாக வந்தவர்களை நிறுத்தி, அனைவரின் உதவியோடு, காரில் இருந்தவரை மீட்டு பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தார்.
இதனை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டு ஷமி கூறியுள்ளதாவது: அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு 2வது வாழ்க்கையை கொடுத்துள்ளார். அவரது கார், மலைப்பாதையில் இருந்து எனது காருக்கு முன்னாள் கீழே விழுந்தது. நாங்கள் அவரை பாதுகாப்பாக வெளியே எடுத்தோம். இவ்வாறு முகமது ஷமி கூறியுள்ளார்.முகமதுஷமியின் செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement