திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபத்தைத் தொடர்ந்து இன்று பவுர்ணமி கிரிவலம் தொடங்கும் நிலையில், நாளை அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறுகிறது. உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் குடும்ப சகிதமாக கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் இரவில் பக்தர்கள் கிரிவலம் வருவதுபோல் அண்ணாமலையார் ஆண்டுக்கு 2 முறை கிரிவலம் வருகிறார். கார்த்திகை தீப திருநாளின் மறுநாள் மற்றும் தை மாதம் மாட்டு பொங்கல் ஆகிய இந்த 2 நாட்களிலும் அதிகாலையில் அண்ணாமலையார் […]
