சேலம்: வடகிழக்கு பருவமழை மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 65அடியை எட்டியுள்ளது. நடப்பாண்டு சம்பா பயிரிட போதுமான அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் இல்லாததாலும், காவிரில் கர்நாடக அரசு திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வந்ததால், போதிய நீரின்றி சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் கடந்த […]
