செங்குன்றம்: சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புழல் சிறையில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையின்போது, செல்போன் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள், வெளிநாட்டு கைதிகள், கொடூர குற்ற வழக்குகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பல கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 500-க்கும் மேற்பட்ட […]
