வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த மாதம், 7ம் தேதியில் இருந்து போர் நடந்து வந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில், நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கத்தாரில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி மேற்கொள்ளப்பட்ட நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து இன்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பது என கத்தார் அறிவித்தது, ,பிணை கைதிகள், சிறை கைதிகள் விடுதலை செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement