இந்துார், மத்திய பிரதேசத்தில் தனியார் பள்ளியில், மாணவனை, சக மாணவர்கள், பள்ளிகளில் படம் வரைய பயன்படுத்தப்படும் ‘ஜியோமெட்ரி காம்பஸ்’ என்ற கூர்மையான கருவியால், 108 முறை குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ம.பி.,யின் இந்துார் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே, கடந்த 24ம் தேதி சண்டை நடந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மூன்று மாணவர்கள் ஒன்று சேர்ந்து, சக மாணவனை, ஜியோமெட்ரி காம்பசால், 108 முறை குத்தி உள்ளனர். இதில் அந்த மாணவன் காயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, குழந்தைகள் நல குழு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement