வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி, ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு. இவருக்கு அங்கு ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை உள்ளது.
இந்நிலையில் அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றதை தொடர்ந்து புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு குடிபெயர்ந்தார்.
இந்த மாத துவக்கத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற புதுடில்லி தலைமை தேர்தல் அதிகாரி, கிருஷ்ணமூர்த்தி, ஜனாதிபதியின் ஆவணங்களை சேகரித்தார்.
இதையடுத்து புதுடில்லி முகவரிக்கு மாற்றப்பட்ட புதிய வாக்காளர் அட்டையை ஜனாதிபதி முர்முவிடம் அவர் நேற்று வழங்கினார்.
இதன் வாயிலாக இனிவரும் தேர்தல்களில் ஜனாதிபதி முர்மு புதுடில்லியில் ஓட்டளிக்க தகுதி பெறுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement