No visa needed to visit Malaysia | மலேசியா செல்ல விசா வேண்டாம்

கோலாலம்பூர் : சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் ‘இந்தியா, சீனாவில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை; 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்’ என, மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலேசியா தங்கள் நாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் விசா இன்றி தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் உலக சுற்றுலா பயணிகளில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ள சீனா, இந்தியா நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு டிச., 1 முதல் விசா தேவை இல்லை என்றும், அவர்கள் 30 நாட்கள் வரை தங்கள் நாட்டில் தங்கியிருக்கலாம் என்றும் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அன்வர் இப்ராஹிம், ”சீன தூதரகத்துடன் இணைந்து, 50 ஆண்டுகள் கடந்ததைக் கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன், மலேசியா நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு டிச., 1 முதல் 15 நாட்கள் வரை தங்க, இலவச விசா அனுமதியை சீனா அறிவித்தது. அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மலேசியாவின் சுற்றுலாவை ஊக்குவிக்க நாமும் இலவச விசா சலுகையை அறிவித்துள்ளோம். குற்றப்பின்னணி கொண்டவர்கள் இதில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது தொடர்பாக முழு விவரங்களை உள்துறை அமைச்சர் விரைவில் வெளியிடுவார்,” என்றார்.

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உலக சுற்றுலா பயணிகளின் வருகையை ஈர்க்கும் நோக்கில் சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளான துருக்கி மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளுக்கு இலவச விசா அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.