வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பதிவு செய்வதற்கான கட்டாய நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் வழங்குவதாக அறிவிப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம். இது லஞ்சம் வழங்குவதற்கு இணையானது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், தேர்தல் கமிஷன் விதிக்கும் நிபந்தனைகளை மீறும் அரசியல் கட்சிகள், பதிவு செய்வதற்கான கட்டாய நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வழங்கப்பட வேண்டும் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement