உத்தராகண்ட், சில்க்யாரா சுரங்கத்தில் , 41 தொழிலாளர் சிக்கிய சம்பவம் நவ.,12ல் நடந்தது
சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் எண்ணில் அடங்காதவை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டார்
விளைவு, சம்பவ இடத்திலேயே பிரதமர் அலுவலக அதிகாரிகள் 5 பேர் முகாமிட்டு மீட்பு பணியை ஒருங்கிணைத்தனர். மத்திய அமைச்சர்கள் கட்காரி, வி.கே.சிங், உத்தராகண்ட் முதல்வர் தாமி மீட்பு பணியை மேற்பார்வையிட்டனர்
முதலில், தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, தண்ணீர், ஆக்சிஜன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.இந்தியாவில் இல்லாத இயந்திரங்கள் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் அனுப்பி கொண்டு வரப்பட்டன
சுரங்க அமைப்பில் நிபுணத்துவம் கொண்ட பொறியாளர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து வரழைக்கப்பட்டனர்.மீட்டவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக, ஹெலிபேட் அதே இடத்தில் அமைக்கப்பட்டதுஇதன் பயனாக, 17ம் நாளன்று தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்
இந்திய வரலாற்றில் இத்தகைய ஒரு மீட்பு பணி, முன் எப்போதும் நடந்திராத ஒன்று அதை வெற்றிகரமாக செய்து காட்டிய, மத்திய, மாநில அரசுகளின் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement