‘ராட் ஹோல் மைனிங்’ எனப்படும், எலி துளை சுரங்கம் தோண்டும் நடைமுறை, தற்போது சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டதில் முக்கிய பங்காற்றி உள்ளது
இந்த வகை சுரங்க நடைமுறை, வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், பொதுவாக சரிவை சந்திக்கும் நிலக்கரி சுரங்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இதில், சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டனர். இந்த நடைமுறையின் போது சுரங்கம் சரிந்து விழுந்து அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து, 2014ல், தேசிய பசுமை தீர்ப்பாயம் இதற்கு தடை விதித்தது
சில்க்யாரா விவகாரத்தில் வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால், எலி துளை சுரங்கம் நடைமுறை பயன்படுத்தப்பட்டது. இதற்காக, தலைநகர் புதுடில்லியில் இருந்து, 12 பேர் அடங்கிய இரு சிறப்பு நிபுணர் குழுக்கள் சில்க்யாராவுக்கு வந்தனர்
புதுடில்லியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் எலி துளை சுரங்கத் தொழிலாளர்கள் அல்ல; அந்த தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
இது குறித்து, உத்தரகண்ட் அரசின் நோடல் அதிகாரி நீரஜ் கைர்வால் கூறுகையில், ”புதுடில்லியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் எலி துளை சுரங்கத் தொழிலாளர்கள் அல்ல; எனினும், அந்த தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement