மதுரை: மதுரை பகுதி அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் மத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, என்ஐஏ என பல்வேறு துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். பல அமைச்சர்களும் அமலாக்கத்துறை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் […]
