சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. பழனிச்சாமி மற்றும் பாக்கியா உறவை கொச்சைப்படுத்தி கோபி பேசிய நிலையில், பழனிச்சாமியை நேரில் சந்தித்து தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்கிறார் பாக்கியா. மற்றவர்களுக்காக அவரது நட்பை தான் இழக்க தயாராக இல்லை என்பதையும் அவருக்கு விளக்கமாக கூறுகிறார்.
