சென்னை: லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் வெளியாகும் முதல் படமான ஃபைட் கிளப் படத்தின் டீசர் தற்போது வெளியானது. இந்த படத்தில் உறியடி விஜய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். ஆக்ஷன் படங்களை பார்க்கத்தான் இளைஞர்கள் அதிகளவில் தியேட்டருக்கு செல்கின்றனர் என்பதை டார்கெட் செய்து தொடர்ந்து அதே போன்ற படங்கள் அணிவகுத்து ரிலீஸ் ஆகி வருகின்றன.
