சாம்ராஜ்நகர் : பிரசித்தி பெற்ற புண்ணிய தலமான மலை மஹாதேஸ்வரா கோவிலின் லட்டு தயாரிப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சாம்ராஜ்நகர் ஹனுாரில் உள்ள மலை மஹாதேஸ்வரா மலை, பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். கர்நாடகாவின் பணக்கார கோவில்களில், இதுவும் ஒன்று.
கோவில் அருகில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் மையம் உள்ளது. நேற்று மதியம் 2:30 மணிளவில் இங்கிருந்த காஸ் சிலிண்டரில், காஸ் கசிந்து தீப்பிடித்தது. எண்ணெய் பொருட்கள், எண்ணெய் பிசுக்கு இருந்ததால், தீ வேகமாக பரவியது. இதில் லட்டு தயாரிக்கும் உபகரணங்கள் தீயில் எரிந்து கருகின.
தீ விபத்து நடந்தபோது, ஊழியர்கள் மதிய உணவுக்கு சென்றிருந்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement