பவுஞ்சூர்:பவுஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ‘மிக்ஜாம்’ புயல் அவசர ஆலோசனை கூட்டம், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி முன்னிலையில், நேற்று நடந்தது.இதில், செய்யூர் வட்டாட்சியர் சரவணன், செய்யூர் எம்.எல்.ஏ., பாபு, லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற வேண்டும்.
சாலை ஓரங்களில் உள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும். சேதமடைந்த மின்கம்பிகளை கண்டறிந்து சீரமைக்க வேண்டும். பொதுமக்களுக்கு துாய்மையான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதேபோல, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement