வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: துபாயில் பருவ நிலை மாநாட்டில் பங்கேற்ற மோடி, அந்த மாநாடு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 28 வது ஐ.நா., பருவநிலை உச்சி மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டிற்கு இடையே பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ், யுஏஇ அதிபர், நெதர்லாந்து பிரதமர், இத்தாலி பிரதமர் உள்ளிட்ட பல நாட்டு உலக தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
மாநாட்டை முடித்து கொண்டு டில்லி திரும்பிய பிரதமர் மோடி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛ நன்றி துபாய், பருவநிலை உச்சி மாநாடு ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. சிறந்த பூமியை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்” எனக்கூறியதுடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், உலக தலைவர்களை சந்தித்தது, அவர்களுடன் கலந்துரையாடியது, மாநாட்டில் பேசியது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement