சென்னை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மாஸ் காட்டியது இந்தப் படம். இதனையடுத்து விஜய் – ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக அட்லீ கூறியிருந்தார். இந்நிலையில், விஜய், ஷாருக்கான் கூட்டணியில் கமலும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
