ஹாசன், : உல்லாச வீடியோவை காண்பித்து, இளம்பெண்களை மிரட்டி பணம், நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் சக்லேஸ்பூர் குஷால்நகர் லே – அவுட்டில் வசிப்பவர் சரத் பூஜாரி, 26. இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்.
ஹாசன் பேலுாரை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன், சரத்திற்கு பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசைக் காட்டி உல்லாசம் அனுபவித்து, வீடியோ எடுத்துள்ளார்.
இதுபோல் ஷிவமொகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரையும், சரத் காதல் வலையில் வீழ்த்தி, உல்லாசம் அனுபவித்து உள்ளார். சரத்தின் நடவடிக்கை பற்றி, பேலுாரை சேர்ந்த காதலிக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்டு தகராறு செய்தார். அப்போது காதலியை அடித்து, உதைத்த சரத், ஷிவமொகாவை சேர்ந்த காதலிக்கு, வீடியோ கால் செய்து காண்பித்துள்ளார். அதை அந்த இளம்பெண் வீடியோ எடுத்தார்.
சக்லேஸ்பூர் போலீசில் சரத் மீது புகார் செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் காதல் பெயரில் உல்லாசமாக இருந்துவிட்டு, அந்த வீடியோவை காண்பித்து இளம்பெண்களை மிரட்டி பணம், நகை பறித்தது தெரியவந்துள்ளது.
சரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், அவர் மீது புகார் செய்யலாம் என, போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement