சூர்யகுமார், தரமான கேப்டன் என நிரூபிச்சுட்ட..! கோப்பை பெற்ற பிறகு செஞ்ச சம்பவம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை சூர்யகுமார் தலைமையிலான இளம் படை வென்று அசத்தியிருக்கிறது. உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தவுடன் நேரடியாக அந்த அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில், இளம் வீரர்களுக்கு கேப்டனாக தலைமை தாங்கினார் சூர்யகுமார். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்திய இளம் படை மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால் ஆஸ்திரேலிய அணி தொடரை இழப்பதில் இருந்து தப்பித்தது. இருப்பினும் நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

பெங்களுரில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சம்பிரதாய போட்டியாகவே நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து 4-1 என தொடரைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிய ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார்.

இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும். ரவி பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 31 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய அக்சர் படேலுல் ஆட்டநாயகன் விருது வென்றார். அதேபோல் 5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை பெற்றார். 

இதன்பின் தனது தலைமையில் இந்திய அணி முதன்முறையாக கோப்பையை வென்றதை மகிழ்ச்சியோடு சென்று கோப்பையை பெற்றுக் கொண்ட சூர்யகுமார் பேட்டிங்கில் தொடர் முழுவதும் கலக்கிய இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷிடம் அதனை வழங்கினார். இதுவரை இந்திய அணிக்கு கேப்டன்சி செய்த வீரர்கள் அனைவரும் எந்த தொடரில் கோப்பையை வென்றாலும் இளம் வீரர்களிடம் முதலில் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதே பாதையை இப்போது சூர்யகுமாரும் பின்பற்றியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.