மைசூரு : மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த வாலிபர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மைசூரு மாவட்டம், ஹூன்சூர் ஹிரிகேத்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 45. இவர், நேற்று ஏரி அருகில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். கும்பலாக வந்த தேனீக்கள், அவரை கொட்டின. வலி தாங்க முடியாத அவர், ஏரியில் குதித்து தப்பித்தார்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள், ஜெகதீசை மீட்டு, டவுன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement