சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகர் ஹனுாரில் உள்ள மலை மஹாதேஸ்வரா கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. கர்நாடகா மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து வேண்டுதல் வைப்பர். வேண்டுதல் நிறைவேறியதும் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
மாண்டியாவை சேர்ந்தவர் விவசாயி மாதேகவுடா. எனவே 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வாகனத்தில் ஏற்றி, மலை மஹாதேஸ்வரா கோவிலுக்கு நேற்று அழைத்து வந்தார்.
ஆடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்தார். அதன்பின் மலை மஹாதேஸ்வரா கோவிலை, ஆடுகளுடன் சேர்ந்து மூன்று முறை பிரதட்சணம் செய்தார்.
ஆடுகள் மஹாதேஸ்வரா கோவிலை, வலம் வருவதை கண்ட பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement