மைசூரு : சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, மலைப்பகுதி பாலகா அறக்கட்டளை சார்பில் நடப்பாண்டும் மஹா அபிஷேகம் நடத்தப்பட்டது.
மைசூரு சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலையை, அன்றைய மன்னர் சாமராஜ உடையார் வழங்கினார். 200 ஆண்டுகள் பழமையான இந்த சிலை, 9 அடி உயரம், 15 அடி நீளம் கொண்டது.
சாமுண்டி மலையில் வசிக்கும் பல்வேறு கிராமத்தை சேர்ந்த மக்களால், ‘மலை பாலக அறக்கட்டளை’ சார்பில் ஆண்டு தோறும் நந்தி சிலைக்கு மஹா அபிஷேகம் செய்யப்படும்.
கார்த்திகை மாதத்தை ஒட்டி, நேற்று சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், ஆதிசுஞ்சனகிரி மைசூரு கிளை மடத்தை சேர்ந்த சுவாமிகள் முன்னிலையில், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது.
காலை முதல் மதியம் வரை மஞ்சள், குங்குமம், பால் உட்பட 18 பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தரிசிக்க, பக்தர்கள் பலர், படிக்கட்டு வழியாக ஏறி வந்தனர்.
கார்த்திகை மாதத்தை ஒட்டி, நேற்று இரவில் அகல் விளக்கு ஏற்றப்பட்டது. இன்று சோமவாரத்தை ஒட்டி, மாலையில் அகல் விளக்கு ஏற்றப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement