Telangana BJP candidate who defeated two big heads | இரு பெரும் தலைகளை வீழ்த்திய தெலுங்கானா பா.ஜ., வேட்பாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஹைதராபாத : பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், காமாரெட்டி மற்றும் கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

காங்., மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி, கொடங்கல் மற்றும் காமா ரெட்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில், கஜ்வெல் தொகுதியில் சந்திரசேகர ராவும், கொடங்கல் தொகுதியில் ரேவந்த் ரெட்டியும் வெற்றி பெற்றனர்.

காமாரெட்டி தொகுதியில் இவர்கள் இருவரையும் எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமணா ரெட்டி, 6,700 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த, 53 வயதான வெங்கட ரமணா ரெட்டி, பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

இவருக்கு, 49.7 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கடந்த 2018 சட்டசபை தேர்தலில், காமாரெட்டி தொகுதியில் பாரத் ராஷ்ட்ர சமிதி வேட்பாளர் கம்ப்பா கோவர்த்தன் வெற்றி பெற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.