மேடக்: தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் (ஐஏஎப்) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள துண்டிகல் விமானப்படை அகாடமியான ஏஎப்ஏ.,வில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக பிலாடஸ் பிசி 7 எம்கே-II விமானம் புறப்பட்டது. திடீரென டூப்ரான் என்ற இடத்தில் உள்ள ரவெல்லி கிராமத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்து தெரிவித்த இந்திய விமானப்படை, ‛விமானம் விபத்தானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது. விமானிகளின் மரணத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement