
‛கேம் சேஞ்சர்' ரிலீஸ் எப்போது…? – தயாரிப்பாளர் பதில்
கமலின் ‛இந்தியன் 2' படம் பாதியில் நின்றபோது ராம் சரணை வைத்து ‛கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்க தொடங்கினார் ஷங்கர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் உள்ள இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் அஞ்சலி, ஜெயராம், சுனில், சமுத்திரகனி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி தில் ராஜூ கூறுகையில், ‛‛நல்ல தரமான படங்கள் உருவாக அதிக நாட்கள் எடுக்கும். ராஜமவுலி, சுகுமார், ஷங்கர் போன்றோர் தங்களுக்கான காட்சிகள் திருப்தியாக வரும் வரை அதில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. முழு படமும் முடிந்த பிறகு தான் ரிலீஸ் பற்றி யோசிக்க முடியும்'' என்றார்.