விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை ராமபுலி அய்யனார் சுவாமி கேட்டவருக்கு கேட்டவரம் தருபவராக அருள்பாலிக்கிறார்.
பல ஆண்டுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தவர் மன்னரான சிதம்பர பாண்டியன். இவர் தினமும் தனது இஷ்டதெய்வமான மதுரையில் உள்ள கோச்சடை முத்தையா அய்யனாரை வணங்கி வந்தார். இப்படி பல ஆண்டுகள் கடந்தன. வயது முதிர்வின் காரணமாக ஒருநாள் அய்யனாரிடம், ‘உடல்நிலை காரணமாக இனி என்னால் இங்கு தரிசனம் செய்ய வர முடியாது. உன் திசையை நோக்கி தினமும் வணங்குகிறேன்’ என வேண்டினார். அன்று கனவில் தோன்றிய அய்யனார், ‘தான் சிப்பிப்பாறை பகுதியில் உள்ள குளத்தில் கருவேல மரத்திற்கு அடியில் உள்ள பாறையில் உள்ளேன்’ என்றார். அதன்படி இங்கு வந்த மன்னருக்கு மரத்திற்கு அடியில் ராமபுலி அய்யனார் காட்சி அளித்தார். பின் கோயிலும் கட்டப்பட்டது.
21 பரிவார தெய்வங்களோடு ராமபுலி அய்யனார் கையில் தாமரையுடன் வலதுகால் ஊன்றியும் இடதுகால்மடக்கி அமர்ந்தபடி
காட்சி தருகிறார். இவர் தவக்கோலத்தில் இருப்பதால் இங்கு ஆடு, கோழி பலியிடுவதில்லை. தொடர்ந்து 5 வெள்ளிக் கிழமை அல்லது 5 அமாவாசை அல்லது 5 பவுர்ணமி நாளில் விளக்கேற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும். இங்கு சுதைச் சிற்பத்தில் உள்ள அய்யனார் குதிரைமீது அமர்ந்து வலது கையில் அரிவாளுக்கு பதில் சாட்டையை சுழட்டியபடி உள்ளார்.
விருதுநகரில் இருந்து சிவகாசி வழியாக 54 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 1:00 மணி
மாலை 4:00 – 7:30 மணி
தொடர்புக்கு: 94431 23456, 94860 14921
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement