
ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ
இளன் இயக்கத்தில் நடிகர் கவின் 'ஸ்டார்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துடிக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்தில் கவின் நடிக்கின்றார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை 2024ல் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9ந் தேதி திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.