பெங்களூரு : பெங்களூரில் 140 ஏரிகளை நிர்வகிக்க, பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சி எல்லைப் பகுதியில், 210 ஏரிகள் உள்ளன. இவற்றில், பல ஏரிகளை சரியாக நிர்வகிக்காமல் உள்ளனர். சாக்கடை கால்வாய் நீர் கலந்து அசுத்தமாக காணப்படுகின்றன.
சில ஏரிகளில் அடிக்கடி ரசாயன கழிவு நீர் கலந்து, மீன்கள் இறக்கின்றன. செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், ஏரிகளை பாதுகாக்கும்படி பெங்களூரு மக்கள் வலியுறுத்தினர்.
இதன் அடிப்படையில் நிர்வகிக்கப்படாமல் உள்ள 140 ஏரிகளுக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்து, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிகாரிகள், ஏரியில் கழிவு நீர் கலக்காமல் தடுப்பது, ஆங்காங்கே வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவது, துார்வாருவது, குப்பை கொட்டுவதை தடுப்பது உட்பட மாசடைவது தடுத்து, சரியாக நிர்வகிக்க வேண்டும்.
ஏரியின் கரைகளில் பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி செய்து கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். என்ன பணிகள் மேற்கொண்டனர் என்பதை வாரந்தோறும், மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement