இஸ்ரேல்: இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த அக்டோபரில் துவங்கியது. ஹமாஸ் இயக்கத்தால் காசாவிற்கு கடத்திச்செல்லப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும்போது அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டுவதற்காக போதைப்பொருள் கொடுத்து உட்கொள்ளச் செய்ததாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் நாட்டில் நுழைந்து கடத்திச்சென்ற இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக 51 நாட்கள் வைத்திருந்தது. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த பேச்சு வார்த்தையின்போது இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகளுக்கு இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கு அழைத்துச்சென்று மருத்துவப்பரிசோதனை செய்தது. அதில் பிணைக்கைதிகளுக்கு ரத்தப்பிரிசோதனையில் போதைப்பொருள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் விடுவிக்கப்படும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டுவதற்காக ஹமாஸ் இயக்கம் போதைப்பொருள் உட்கொள்ளச் செய்தது தற்போது தெரியவந்துள்ளதாக இஸ்ரேல் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement