பெங்களூரு : போலீசாரை மிரட்டியது, பணிக்கு இடையூறு செய்ததாக, சிக்கமகளூரின் நான்கு வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சிக்கமகளூரில் நவ., 30ம் வழக்கறிஞர் பிரீதம், ஹெல்மெட் அணியாமல் வந்ததால், போலீசார் அவரை தடுத்து, வாகன சாவியை எடுத்தனர். இதனால் கோபமடைந்த பிரீதம், ‘நான் வழக்கறிஞர். சாவியை எடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என, கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரை சரமாரியாக தாக்கினர்.
இதை கண்டித்து, போலீஸ் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டனர். அங்கிருந்த போலீசாரை தாக்கியது மட்டுமின்றி, மேஜை, நாற்காலியை துவம்சம் செய்தனர்.
இந்த செயலை கண்டித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார், அவரது குடும்பத்தினர், ‘போலீசாரை தாக்கி, பணிக்கு இடையூறாக இருந்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி, நகரில் போராட்டம் நடத்தினர்.
அங்கு வந்த உயர் போலீஸ் அதிகாரிகள், நடவடிக்கை நடவடிக்கை எடுப்பதாக கூறி சமாதானம் செய்தனர்.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் சுஜேந்திரா, புவனேஷ், நந்தீஷ், சுதாகர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பதிவை கண்டித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், நான்கு வழக்கறிஞர்களும் மனுத் தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், நான்கு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்