ஐஸ்வால் :மிசோரம் மாநில சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள 32 வயது இளம் பெண் எம்.எல்.ஏ.,வை 2.50 லட்சம் பேர்கள் பாலோயர்களாக உள்ளனர்.
தற்போது நடைபெற்ற மிசோரம் மாநில சட்டசபைக்கு ஸோரம் மக்கள் கட்சிசார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் 32 வயதான பெண் எம்.எல்.ஏ., பரில் வனீஷங்கி. இவர் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர் லால்னுன் மாவியா என்பவரை 9,370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முன்னதாக இவர் ஐஸ்வால் முனிசிபல் கார்ப்பரேஷனில் கார்ப்பரேட்டராக பணியாற்றி உள்ளார். மேகாலயாவின் ஷில்லாங்கில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை துவக்கி உள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலமான இவரை, இரண்டரை லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement