வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பையாங்க்: வட கொரிய பெண்கள் இனி அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என வட கொரியா அதிபர் கிம்ஜோங் உன், கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்,41 , 2011 ல் நாட்டின் அதிபராக பொறுப்பேற்று கொண்ட பிறகு உலக நாடுகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.
இந்நிலையில் வட கொரிய பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அதிபர் கிம் ஜோங் உன் பேசியது,, கட்சி , மற்றும் அரசு நிர்வாக பணிகளைக் கையாள்வதில் எனக்கு சிரமம் ஏற்படும் போது நான் எப்போதும் தாய்மார்களைப் பற்றி நினைப்பேன். நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவது எதிர்காலத்துக்கே ஆபத்து. இதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெண்களுக்கு மட்டுமே உள்ளது.
எனவே வட கொரிய பெண்கள் இனி அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு பேசினார். பேசும் போதே உணர்ச்சி வசப்பட்டு கண்களில் கண்ணீர் வர அதை கைக்குட்டையால் துடைப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
புடினின் ஆசை
கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் பேசுகையில், நம் நாட்டின் மக்கள் தொகை சரிவை சந்தித்துவருகிறது பிறப்பு விகிதம் சரிந்து வருவதால், ஒவ்வொரு பெண்களும் 8 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். வரும் காலத்தில் ரஷ்ய மக்கள்தொகையை அதிகரிப்பதே அரசின் இலக்கு என கூறியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement