ஃபோக்ஸ்வேகன் வருட முடிவில் ரூ.4.20 லட்சம் தள்ளுபடி

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வருடாந்திர முடிவை கொண்டாடும் வகையில் டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.4.20 லட்சம் வரை சலுகை கிடைக்கின்றது. மற்றபடி, டைகன், விர்டஸ் போன்றவற்றுக்கும் சலுகை அறிவித்துள்ளது.

VW year end offers

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடலுக்கு வழங்கப்படுகின்ற ரூ.4.20 தள்ளுபடியில், ரூ.75,000 ரொக்க தள்ளுபடி, ரூ.75,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், 1,00,000 கார்ப்பரேட் போனஸ், ரூ. 85,999 மதிப்புள்ள 4 வருட சர்வீஸ் பேக் கூடுதலாக 84,000 சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து விர்டஸ் செடான் காருக்கு ரூ.1,17,000 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த தள்ளுபடியில், ரூ.50,000 ரொக்க தள்ளுபடி, ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், 17,000 கார்ப்பரேட் போனஸ்,  கூடுதலாக 30,000 சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகன் காருக்கு ரூ.1,46,000 தள்ளுபடியில், ரூ.40,000 ரொக்க தள்ளுபடி, ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ், 30,000 கார்ப்பரேட் போனஸ்,  கூடுதலாக 36,000 சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் 31-12-2023 வரை மட்டுமே வழங்கப்படும். டீலர்கள், வேரியண்ட் அடிப்படையில் மாறக்கூடும். மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரை அனுகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.