ஐ.பி.எல் 2024: மும்பை இந்தியன்ஸில் ரோகித் இடத்துக்கு போட்டி போடும் மூன்று இளம் வீரர்கள்..!

ஐ.பி.எல் 2024 ஏலம் நெருங்கி வருவதால், அணிகள் தங்கள் விருப்பப் பட்டியலைத் தயாரித்து, சிறந்த அணியைக் கட்டமைக்க முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா புதிய கருத்தையும், தன்னுடைய விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலானோர் ரோஹித் ஷர்மா அல்லது ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவார்கள் என்று நம்புகையில், சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என ஜடேஜா வலியுறுத்தியுள்ளார்.

“ரோஹித் ஷர்மா ஐபிஎல் 2024 சீசனில் விளையாடவில்லை என்றால், சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக்க வேண்டும்,” என்று ஜடேஜா ஸ்போர்ட்ஸ் டாக்கிற்கு பேட்டியளித்துள்ளார். மேலும், டி20 2024 உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்கள் ஐபிஎல் முழு சீசனையும் விளையாடாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் களைப்படைந்து விடுவார்கள், காயமடையவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் ஜடேஜா எச்சரித்திருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பங்களாதேஷுக்கு எதிராக விளையாடும் போது காயமடைந்தார். இவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மீண்டும் விளையாட வாய்ப்புள்ளது. அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் 2024 retentions காலக்கெடு முடிந்த ஒரு நாள் கழித்து தங்களது அணியில் இருந்து விடுவித்தது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தையடுத்து அவர் குஜராத்  அணியில் இருந்து விலகினார். 

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். இப்போது காயத்தில் இருக்கும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் இருக்கிறார். அவர் அடுத்த 2 ஆண்டுகள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் மற்றும் அவரது முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிசிசிஐ பாண்டியாவை கண்காணித்து வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்காக பிசிசிஐ மற்றும் என்சிஏ 18 வார பயிற்சி திட்டத்தை வகுத்துள்ளனர். மார்ச் வரை ஒவ்வொரு நாளும் பாண்டியாவின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுக்கப்பட இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பிசிசிஐ அனுமதி கொடுக்கும். இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வேண்டும் என்ற விருப்பம் பும்ராவுக்கும் இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.